ADDED : நவ 11, 2025 06:51 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரன், 90,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 11,410 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 91,280 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 167 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் அதிகரித்து, 11,480 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் உயர்ந்து, 91,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 1,440 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 169 ரூபாய்க்கு விற்பனையானது.

