திருச்சி விமான நிலையத்தில் ரூ.75.71 லட்சம் தங்கம் சிக்கியது
திருச்சி விமான நிலையத்தில் ரூ.75.71 லட்சம் தங்கம் சிக்கியது
ADDED : ஜன 16, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : மலேஷியாவில் இருந்து மூன்று பயணியர் கடத்தி வந்த 75.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 தங்க நாணயங்களை திருச்சியில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி வந்த மலிண்டோ மற்றும் ஏர் ஏசியா விமான பயணியரை திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த மூன்று பயணியரை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டபோது அவர்கள் தங்களின் உடமைக்குள் வைத்து 30 தங்க நாணயங்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
மொத்தம் 1.199 கிராம் எடையுள்ள 75.71 லட்சம்ரூபாய் மதிப்புள்ள அந்த நாணயங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வந்த மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.