தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அரசு பஸ்கள் இயக்கத்தில் அலட்சியம் கூடாது: பா.ம.க.,

அரசு பஸ்கள் இயக்கத்தில் அலட்சியம் கூடாது: பா.ம.க.,

அரசு பஸ்கள் இயக்கத்தில் அலட்சியம் கூடாது: பா.ம.க.,

1


UPDATED : நவ 28, 2026 05:20 PM

ADDED : நவ 28, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 05:20 PM ADDED : நவ 28, 2026 05:16 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘பஸ்கள் இயக்கத்தில், அரசு போக்குவரத்து கழகங்கள் அலட்சியம் காட்டக் கூடாது’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், மொத்தம் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. இவை, 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 317 பணிமனைகளில் இருந்து, 21,198 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட ‘விடியல் பயணத் திட்டம்’ மேம்படுத்தப்பட்டு, வெற்றிப் பயணத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கப்படாமல், பஸ்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது.

அதுவே சரி செய்யப்படாத நிலையில் தான், டயர்கள் பற்றாக்குறை காரணமாக, ஒவ்வொரு பணிமனையிலும், 5 முதல் 10 பஸ்கள் வீதம், தமிழகம் முழுதும், 1500க்கும் கூடுதலான பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மக்கள் பயன்பாட்டுக்கான பஸ்களை இயக்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

அரசு பஸ்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள், குறிப்பாக, கிராமப்புற மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். டயர்கள் கொள்முதலுக்கான புதிய டெண்டர்கள், கடந்த எட்டு மாதங்களாக கோரப்படாததும், அதனால் புதிய டயர்களை வழங்க, டயர் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்து விட்டதும் தான் இந்த சிக்கலுக்கு காரணம்.

எனவே, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us