ADDED : நவ 25, 2025 05:42 AM

சென்னை: பொதுப்பணி துறையில் செய்து முடித்த பணிகளுக்கு, நான்கரை ஆண்டுகளாக பணம் தராததை கண்டித்து, ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் குணமணி கூறியதாவது:
கடந்த 2021ம் ஆண்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதற்காக, இரவு பகலாக அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு செய்யப்பட்ட பணிகளுக்கு, நான்கரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் 'பில்' தொகை வழங்கப்படவில்லை.
ஆட்சி காலம் முடியவுள்ள நிலையில் பணம் கிடைக்காவிட்டால், பணி செய்த ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, இந்த கோரிக்கையை அரசுக்கு எடுத்து சொல்லும் வகையில், டிசம்பர் 18ம் தேதி, சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணி துறை தலைமை அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

