அரசு ஊழியர்கள் நினைத்த நேரத்தில் வெளிநாடு செல்ல முடியும்; விதிகளை எளிதாக்கி அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்கள் நினைத்த நேரத்தில் வெளிநாடு செல்ல முடியும்; விதிகளை எளிதாக்கி அரசாணை வெளியீடு
UPDATED : ஜன 24, 2026 07:07 AM
ADDED : ஜன 24, 2026 06:08 AM

துாத்துக்குடி: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் இனிமேல் நினைத்த நேரத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். விதிமுறைகளை எளிதாக்கி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ சார்பில் வாழ்வாதார கோரிக்கையைாக சி.பி. எஸ். எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சுமார் 23 ஆண்டுகளாக போராடி வந்தனர். இவர்களது கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்று உத்தரவிட்டார். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அவர்கள் வெளிநாடு பயணம் செய்வதற்கு இதுவரை இருந்து வந்த விதிமுறைகளை எளிதாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் கூறியிருப்ப தாவது;
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC) பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு தங்கள் துறையின் உயர் அதிகாரியிடம் தடையில்லா சான்று (No Objection Certificate NOC) வேண்டும்.
இந்த சான்று, ஊழியருக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. பாஸ்போர்ட் பெறுவதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றாலும், வெளிநாடு செல்வதற்கு துறை தலைமையகத்தின் முன் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி, பயணத்தின் நோக்கம், செல்லும் நாடு மற்றும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இது போன்ற கட்டுப்பாட்டால் அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய அரசாணையின்படி, SimpleGov முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கலான நடைமுறைகள் குறைக்கப்பட்டு, எளிய முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.passportindia.gov.in) (www.passportindia.gov.in) அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங் களை (அடையாளச் சான்று, முகவரிச் சான்று, NOC) டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி முதலில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள முறைப்படி ஐ.எப்.எச்.ஆர்.எம். எஸ்., மூலம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தகவல் கடிதம் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசர நிலை என்றால் மட்டும் அதற்கான விண்ணப்பத்தை ஏற்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியே அடையாளச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் பெறுவதற்கான தடை யில்லா சான்றிதழை வழங்குவார். நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியி டம் தடையில்லா சான் றிதழை பெற்ற பிறகே வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை தேடக்கூடாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

