sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அரசுக்கு ஒரு டஜன் கூடுதல் தலைமை வக்கீல்கள்: சாதாரண வழக்கிற்கும் காசுக்காக ஆஜராவதாக ஐகோர்ட் அதிருப்தி

/

 அரசுக்கு ஒரு டஜன் கூடுதல் தலைமை வக்கீல்கள்: சாதாரண வழக்கிற்கும் காசுக்காக ஆஜராவதாக ஐகோர்ட் அதிருப்தி

 அரசுக்கு ஒரு டஜன் கூடுதல் தலைமை வக்கீல்கள்: சாதாரண வழக்கிற்கும் காசுக்காக ஆஜராவதாக ஐகோர்ட் அதிருப்தி

 அரசுக்கு ஒரு டஜன் கூடுதல் தலைமை வக்கீல்கள்: சாதாரண வழக்கிற்கும் காசுக்காக ஆஜராவதாக ஐகோர்ட் அதிருப்தி


ADDED : டிச 21, 2025 12:14 AM

Google News

ADDED : டிச 21, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''தமிழகத்தில் ஒரு டஜன் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருப்பது ஒரு சங்கடமான விஷயம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில், தனி நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

மதுரை வழக்கறிஞர் திருமலை தாக்கல் செய்த மனுவில், 'மதுரை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞராக 1992 முதல் 2006 வரை வழக்குகளில் ஆஜரானேன். அதற்குரிய கட்டணம், 13 லட்சத்து 5,770 ரூபாயை வழங்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜய்கார்த்திகேயன் ஆஜரானார்.

மாநகராட்சி தரப்பு, 'கட்டண பட்டியல்களுடன் தீர்ப்புகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பொது ஏலம் உள்ளிட்ட பல வழக்குகளால் மாநகராட்சிக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. அதனால் தான் மனுதாரர் நீக்கப்பட்டார். தீர்ப்புகளின் நகல்களை சமர்ப்பிக்காததால் மனுதாரருக்கு தொகையை வழங்க முடியவில்லை' என, தெரிவித்தது.

வியப்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

'தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன் கூலி கொடுப்பீர்' என்பது துாய நபிகள் நாயகத்தின் அறிவுரை. இக்கோட்பாடு நியாயத்தின் ஒரு அம்சம் மட்டுமே. அதை இவ்வழக்கிலும் மேற்கோள் காட்டலாம்.

மனுதாரர் வறுமையில் உள்ளார். அவர், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரை அணுகி, தான் ஆஜரான வழக்குகளின் பட்டியலை ஒப்படைக்க வேண்டும். அதை சரிபார்த்து மனுதாரருக்கு சான்று வழங்க வேண்டும். அதன் பின் மனுதாரருக்கு மாநகராட்சி நிர்வாகம் கட்டணத்தை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் உ ட்பட அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் சில சட்ட அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் அதிக கட்டணத்தை கண்டு வியக்காமல் இ ருக்க முடியவில்லை.

மதுரை காமராஜ் பல்கலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட சில ரிட் மனுக்களை நான் கையாண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட மூத்த வழக்கறிஞர் பல்கலை சார்பில் ஒருமுறை ஆஜராவதற்கு, 4 லட்சம் ரூபாய் கட்டணம் வழங்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க முடியாத அளவிற்கு நிதி நிலை மோசமாக இருப்பதாக கூறும் அப்பல்கலை நிர்வாகம், தனது வழக்கறிஞர்களுக்கு அதிக கட்டணம் வழங்குவதில் சிரமம் கொள்வதில்லை.

புது அரசு வழக்கறிஞர் கையாளக்கூடிய சிறு விஷயங்களில் கூட, தேவையின்றி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். இவை அனைத்தும் சில காசுகளுக்காக தான். நீதிமன்றத்தில் ஆஜராவது என்பது பணத்தை சார்ந்த ஒரு விஷயமாகிவிட்டது.

சட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களின் அளவை நீதிமன்றங்களால் விசாரிக்க முடியாது.

தன்னிச்சை நல்ல நிர்வாகத்திற்கு தேவையான நிதியை பொது கருவூலத்திலிருந்து அளவாக எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கு தன்னிச்சையாக வாரி வழங்கக்கூடாது.

'ஒவ்வொரு வழக்கிலும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராக முடியாது' என, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு குறிப்பிட்டுள்ளது. அவர்கள் ஆஜராவதை நியாயப்படுத்தும் வகையில் வழக்கின் தன்மை இருக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காக, ஆளும் அரசுகள் தேவையற்ற வகையில் அதிக எண்ணிக்கையிலான சட்ட அதிகாரிகளை நியமிக்கின்றன. தமிழகத்தில் ஒரு டஜன் எண்ணிக்கையில் அரசுக்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருப்பது சங்கடமான விஷயம்.

வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வேறு இடத்தில் பணியில் இருப்பதால், வழக்கை ஒத்திவைக்குமாறு அரசு வழக்கறிஞர் கோருகிறார்.

உ யர் நீதிமன்ற மதுரை கிளையிலாவது இதுபோன்ற நடைமுறைகள் முடிவுக்கு வரும்; அரசு கூடுதல் த லைமை வழக்கறிஞர்கள், 2026லிருந்து புது அத்தியாயத்தை துவங்குவர் என நம்புகிறேன்.

தற்போதைய நிலைமை குறித்து வருத்தத்தை தெரிவிக்கும் ஒரே நபர் நான் மட்டுமல்ல; அலகாபாத் உயர் நீதிமன்றமும் இதுபோன்ற கருத்தை தெரிவித்து, ஒரு படி மேலே சென்றது. இவ்விவகாரத்தை உ.பி., அமைச்சரவையில் முன் வைக்குமாறு அது உத்தரவிட்டது. இவ்வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us