ADDED : ஜன 20, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதை பின்பற்றி, 22ம் தேதி பல மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளன. எனவே, தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்குமாறு அரசுக்கு, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்த அறிக்கை: ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். இந்த நுாற்றாண்டின் மகத்தான நிகழ்வை, தமிழக மக்கள் கண்டு களித்து, இறைவன் ராமர் அருள் பெற, முதல்வர் ஸ்டாலின் விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.