டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : செப் 15, 2026 12:13 AM
கடந்த 120 நாள் த.வெ.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, தமிழகம் சுடுகாடாக மாறியதால், மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏமாற்றி ஓட்டுகளை பெற்ற முதல்வர் விஜய், மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நிச்சயம் வெல்லும்; அதற்கான அரசியல் சதுரங்க காய்களை, பொதுச்செயலர் பழனிசாமி நகர்த்தி வருகிறார். சென்னை பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமை செயலகம் கட்டுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். அரசின் நிதி நிலை சரியான பின், வேறு இடம் பார்க்கலாம். முதலீடுகளை திரட்டுவதாக கூறி, லண்டன் சென்ற முதல்வர் விஜய், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை மக்கள் கவனிக்கின்றனர். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக த.வெ.க., அரசு உள்ளது. அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. - அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டசபை கொறடா, அ.தி.மு.க.,