முஸ்லிம்களை அரசு ஏமாற்றுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு
முஸ்லிம்களை அரசு ஏமாற்றுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு
ADDED : மார் 29, 2025 06:53 AM

பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:தமிழகத்தில் ஹிந்து கோவில் சொத்துக்கள், ஏழை எளிய மக்களின் நிலங்களை அபகரிக்கும் சட்டமாக வக்பு வாரிய சட்டம் உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு முன், வக்பு வாரியத்திற்கு 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன.
தற்போது, 12.40 லட்சம் ஏக்கராக உள்ளது. பல லட்சக்கணக்கான கோடி வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு, ஏழை, எளிய முஸ்லிம் சமுதாயத்தில் ஒப்படைப்போம். வக்பு சொத்துக்கள் இல்லை என்றால், உங்களுக்காக நானே போராடுவேன். வக்பு வாரிய திருத்த சட்டத்தில், கலெக்டர் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளதில், என்ன தவறு இருக்கிறது?
முஸ்லிம் சகோதரர்கள் இந்த ஆட்சியினர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 2026 ஏப்ரல் மாதத்திற்குப் பின், ஒருநாள் கூட இந்த அரசு இருக்காது. இந்த அரசு முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறது.
ஆனால், ஹிந்து கோவில்களின் இடத்தை வக்பு வாரியம் எடுக்க முடியாது. எனவே, 24ம் புலிகேசியான தமிழக அரசு, முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக இந்த வக்பு திருத்த சட்ட எதிர்ப்பை கொண்டு வந்துள்ளது.

