தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி
ADDED : பிப் 18, 2024 07:10 PM

சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: டி.என்.பி.எஸ்.சி, ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 27,858 பேர்களுக்கும், பல்வேறு அரசுதுறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நீதி துறையில் 5,981, பள்ளிக் கல்வித்துறையில் 1,847,வருவாய் துறையில் 2,996 ஊரக வளர்ச்சித் துறையில் 857,உயர்கல்வித்துறையில் 1,300, சுகாதாரத்துறையில் 4.286 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூகநலம் உள்ளிட்ட 15,442 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.