தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மது வகைகள் குறித்த ஆய்வறிக்கை தர அரசு மறுப்பு

 மது வகைகள் குறித்த ஆய்வறிக்கை தர அரசு மறுப்பு

 மது வகைகள் குறித்த ஆய்வறிக்கை தர அரசு மறுப்பு


ADDED : செப் 25, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உத்தரவை அடுத்து, தமிழக மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையரின் அறிவுறுத்தலை பின்பற்றி, செயற்கை சுவையூட்டும் பொருட்கள் கலப்பு காரணமாக, 'என்ரிகா' நிறுவனத்தின், 11 மது வகைகளை விற்க, ஆக., 13ல் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை, ஒரே நாளில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையரின் உத்தரவுப்படி விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 11 மது வகைகள் மீது, தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வு அறிக்கை நகல் மற்றும் நடவடிக்கை தொடர்பான ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையரிடம், சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் கேட்டிருந்தார்.

அதற்கு தற்போது, 'மூன்றாம் நபரின் தகவல்களை வழங்க இயலாது' என கூறி, அந்த நகலை வழங்க, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மறுத்து விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us