ADDED : டிச 09, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை:
யானைகளை இடமாற்றம் செய்வதில், தெளிவான வழிகாட்டி முறைகளை வகுக்க, நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
வண்டலுார் உயர்நிலை, வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநர் அ. உதயன், குழுவின் தலைவராக இருப்பார்.
சுற்றுச்சூழல் சிறப்பு செயலர் அனுராக் மிஷ்ரா, நீலகிரி மாவட்டம், கூடலுார் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வன கால்நடை மருத்துவ அலுவலர் கே. கலைவாணன், வன கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ், மயிலாடுதுறை ஏ.வி.சி., கல்லுாரி உதவிப் பேராசிரியர் என்.பாஸ்கரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

