தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ 'நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்'

'நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்'

'நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்'


ADDED : டிச 21, 2024 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தின் ராணிப்பேட்டை மற்றும் ஆந்திராவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு, 1,328 கோடி ரூபாயை அனுமதித்ததற்காக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக மக்களின் சார்பில் நன்றி.

'பாரத்மாலா பரியோஜனா' திட்டம் துவங்கியதில் இருந்து, பிரதமர் மோடி தமிழகத்திற்கு, 2,414 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.

மாநில அரசின் ஆதரவு இல்லாததால், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் தாமதமாகி வருகின்றன.

எனவே, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவைப்படும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us