ADDED : ஜன 09, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள், அதை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் குறித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள், தொழிற்பேட்டைகளுக்குள் மழை நீர் உள்ளே செல்லாமல் இருக்க, திட்டமிடல் தேவைப்படுகிறது.
எனவே, ஜப்பான், இந்தோனேஷியா, வியாட்நாம் உள்ளிட்ட ஐந்து நாடுகளிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் மீட்பு முறை மற்றும் கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்ட தடுப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன், தமிழக அரசு இணைந்து பணியாற்ற, விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
- சுப்ரியா சாஹு,
வனத்துறை செயலர், தமிழக அரசு.