டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த உத்தரவு
ADDED : ஆக 13, 2024 04:50 PM

சென்னை: டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்-யை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
வருவாய் துறை கமிஷனராக உள்ள எஸ்.கே.பிரபாகர், விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதனை கவர்னர் ரவி பரிசீலிக்காமல் இருந்துவந்தார்.