10 ஆண்டுகளாக தகுதியானவர்களுக்கு 'பத்ம விருது': கவர்னர் ரவி பெருமிதம்
10 ஆண்டுகளாக தகுதியானவர்களுக்கு 'பத்ம விருது': கவர்னர் ரவி பெருமிதம்
ADDED : பிப் 16, 2025 07:24 AM

சென்னை : ''கடந்த, 10 ஆண்டுகளாக, தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்து வருகின்றன,'' என கவர்னர் ரவி பெருமையாக கூறினார்.
மத்திய அரசு, 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை, சமீபத்தில் அறிவித்தது; அதில், தமிழகத்தை சேர்ந்த, 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்தன. அவர்களுக்கான பாராட்டு விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு கவர்னர் ரவி சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
பத்ம விருதுகள் பெற உள்ள, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, நல்லி குப்புசாமி, ேஷாபனா சந்திரகுமார், குருவாயூர் துரை, தாமோதரன், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்மந்தன், வேலு ஆசான், ராதாகிருஷ்ணா தேவ சேனாபதி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகர் அஜித் குமார் பங்கேற்கவில்லை; கிரிக்கெட் வீரர் அஸ்வின் சார்பாக, அவரது பெற்றோர் பங்கேற்றனர்.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
பத்ம விருது பெறுவோரோடு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுக்கு தேர்வாகி உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் சார்ந்த துறைகளுக்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர்.
அவர்கள் கடினமாக உழைத்ததால், இந்த இடத்திற்கு தகுதி பெற்றுஉள்ளனர். இந்த விருது
தொடர்ச்சி கடைசி பக்கம்