ADDED : செப் 18, 2024 10:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம், :நாகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
காலையில் வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா சர்ச்சிற்கு தன் மனைவியுடன் சென்ற கவர்னரை, சர்ச் அதிபர் இருதயராஜ், பங்கு பாதிரியார் அற்புதராஜ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கவர்னர் ரவி தனது மனைவி லட்சுமியுடன் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றினார். தொடர்ந்து, மண்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கவர்னரிடம், புனித பிரான்சிஸ் அசிசியின் அமைதிக்கான ஜெப பிரதியை, பாதிரியார்கள் வழங்கினர்.
பாதிரியார்கள் ஜெபம் வாசிக்க, கவர்னரும் உடன் வாசித்தார். சர்ச்சில் உள்ள ஆன்மிக ஓவியங்களை பார்வையிட்டு, அதற்கான விளக்கங்களை பாதிரியார்களிடம் கவர்னர் கேட்டறிந்தார்.