sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'இத்தகைய ஆணவம் நல்லதல்ல' முதல்வருக்கு கவர்னர் கண்டனம்

/

'இத்தகைய ஆணவம் நல்லதல்ல' முதல்வருக்கு கவர்னர் கண்டனம்

'இத்தகைய ஆணவம் நல்லதல்ல' முதல்வருக்கு கவர்னர் கண்டனம்

'இத்தகைய ஆணவம் நல்லதல்ல' முதல்வருக்கு கவர்னர் கண்டனம்


ADDED : ஜன 13, 2025 12:48 AM

Google News

ADDED : ஜன 13, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'இத்தகைய ஆணவம் நல்லதல்ல' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய கீதம் பாட வலியுறுத்தினார். சபையில், அ.தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள், அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக, கவர்னரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

தேசிய கீதம் பாடப்படாத நிலையில், சபையில் இருந்து கவர்னர் வெளியேறினார். 'கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

கடந்த 11ம் தேதி, சட்டசபையில் முதல்வர் பதிலுரை அளித்தபோதும், கவர்னர் மீதான அதே விமர்சனத்தை முன்வைத்தார். 'தமிழகத்தின் வளர்ச்சி கவர்னருக்கு பிடிக்கவில்லை' என்றும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை தர வேண்டும் என வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகளை செய்ய சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

பாரதத்தை ஒரு தேசமாகவும், அதன் அரசியலமைப்பையும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத தலைவராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சம் செய்ததற்கு நன்றி.

இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்து விடாதீர்கள்.

இத்தகைய வெட்ககேடான அவமானத்தை, அவர்கள் விரும்பவோ, பொறுத்துக் கொள்ளவோ மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us