sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவசர நிலை காலத்தை நினைவூட்டும் செயல்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு

/

அவசர நிலை காலத்தை நினைவூட்டும் செயல்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு

அவசர நிலை காலத்தை நினைவூட்டும் செயல்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு

அவசர நிலை காலத்தை நினைவூட்டும் செயல்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு

41


ADDED : ஜன 06, 2025 05:34 PM

Google News

ADDED : ஜன 06, 2025 05:34 PM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அவசர நிலை காலத்தை நினைவூட்டும் செயல் என தமிழக அரசு மீது கவர்னர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக சட்டசபை இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.6) தொடங்கியது. அவைக்கு வந்த கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட உரையாற்றாமலே கவர்னர் புறப்பட்டுச் சென்றார்.

இந் நிலையில், தமிழக அரசின் செயல் அவசர நிலை காலத்தை நினைவூட்டுவதாக உள்ளதாக கவர்னர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து கவர்னர் மாளிகை தரப்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது;

இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டு மொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.

அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us