ADDED : அக் 08, 2025 07:33 AM

தமிழகத்தில் இருக்கும் அனைத்து பல்கலைகளின் வளர்ச்சிக்கும், தமிழக கவர்னர் ரவி, தொடர்ந்து பங்கம் விளைவிக்கிறார். பல்கலை துணைவேந்தர்களை நியமிக்கிற அதிகாரம் அந்தந்த மாநில முதல்வருக்குத்தான் உண்டு என்ற உரிமையை பெற்று தந்தவர் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியால், அதற்கு தொடர்ந்து கவர்னர் தடை போடுகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அமைய வேண்டிய பல்கலைக்கு, அனுமதி தரவில்லை. அது தொடர்பான கோப்புகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இது கால நீட்டிப்பு செய்யும் தந்திரம். இந்த விஷயத்தில், நீதிமன்ற உத்தரவு பெற்று விரைவில் கருணாநிதி பல்கலை அமைக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 47 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், பல மாணவர்கள் உயர் கல்வி பயில்கின்றனர். அதனால், உயர் கல்வி துறையில், தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
- கோவி.செழியன், தமிழக அமைச்சர், தி.மு.க.,