கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பக்கவிளைவுகள் இல்லை: மா.சுப்பிரமணியன் பேட்டி
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பக்கவிளைவுகள் இல்லை: மா.சுப்பிரமணியன் பேட்டி
UPDATED : மே 12, 2024 11:19 AM
ADDED : மே 12, 2024 11:18 AM

சென்னை: 'கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
உயிருக்கு ஆபத்தா?
பின்னர் அவரிடம், கோவிஷீல்டு போட்ட மக்கள் எல்லாம் பயப்படுகிறார்கள்?. உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா என அச்சப்படுகின்றனர்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
பதில்
இதற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் '' எந்த தடுப்பூசியாக இருந்தாலும், போட்டு கொண்டவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து தான் பின் விளைவு இருக்கும். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட அனைவரும் பதட்டத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உடற்பயிற்சி
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைய விடமால், பாதுகாத்து கொள்ள வேண்டும். பொதுவாக, காலையில் உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என பதில் அளித்தார்.