sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்க முடிவு

/

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்க முடிவு

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்க முடிவு

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்க முடிவு


UPDATED : ஆக 23, 2011 11:29 PM

ADDED : ஆக 23, 2011 11:28 PM

Google News

UPDATED : ஆக 23, 2011 11:29 PM ADDED : ஆக 23, 2011 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல் படுத்தப்பட்டது. டெண்டர் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பித்து, இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, அரசிடம் ஒப்பந்தம் செய்தன. இத்திட்டத்தால் ஏழைகள் பயன்பெற முடியவில்லை. சில குறிப்பிட்ட சிகிச்சைகளை, சிபாரிசு அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டன என புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக, அத்திட்டம் கைவிடப்பட்டு, குறைகளை களைந்து, எம்.ஜி.ஆர்., பெயரில் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமல் படுத்தப்படும் என தற்போதைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மருத்துவத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நோயாளிகளுக்கு கூடுதல் வ சதி களுடன் புதிய காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்து கிறது. முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த திட்டத்தில் பயன் பெற்றவர்கள் விவரம்; எந்தெந்த மருத்துவமனை டெண்டர் பெற்றது; எவ்வளவு பணம் காப்பீடாக மக்களுக்கு வழங்கப்பட்டது; சிகிச்சையின் தரம் எப்படி இருந்தது உள்ளிட்ட விவரங் கள் அந்தந்த மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்விவரத்தை அளித்த பின், முதல்கட்டமாக 20 டாக்டர்கள், 30 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் அறிவுரைக்கேற்ப, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை சரிபார்ப்பது; காப்பீடு தொகையை எளிதில் பெற உதவுவது உள்ளிட்ட பணிகளிலும் இப்பணியாளர்கள் ஈடுபடுவர். இப்போதைக்கு 618 மருத்துவமனைகளின் பெயர்களுடன் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்., மாதம் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us