தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/டாஸ்மாக் மதுக்கூடம் ‘டெண்டர்’ வெளியிட அரசு அனுமதி

டாஸ்மாக் மதுக்கூடம் ‘டெண்டர்’ வெளியிட அரசு அனுமதி

டாஸ்மாக் மதுக்கூடம் ‘டெண்டர்’ வெளியிட அரசு அனுமதி


ADDED : அக் 29, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில், ‘பார்’ எனப்படும், மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒப்பந்தம் வழங்க, ‘டெண்டர்’ வெளியிட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் சில்லரை கடைகள் வாயிலாக, மது விற்பனையில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே ஈடுபட்டுள்ளது. இந்த கடைகளில் உள்ள காலியிடத்தில், தின்பண்டம், குளிர்பானம் விற்க தனியாருக்கு, மதுக்கூட உரிமம் வழங்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில் மதுக்கூடங்கள் நடத்த, இரு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த காலம், கடந்த ஜனவரியில் முடிந்த நிலையில், ஜூன் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே மதுக்கூடங்களை நடத்துவோரின் ஒப்பந்த காலம் படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. அந்த ஒப்பந்த காலம் நாளையுடன் முடிவதால், புதிய ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய, டெண்டர் வெளியிட, அரசிடம் டாஸ்மாக் அனுமதி கேட்டது.

இதற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெண்டர் வெளியிட்டு, புதிய ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மதுக்கூட ஒப்பந்த காலத்தை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டித்து, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us