அரசு பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
அரசு பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
ADDED : ஜன 23, 2024 10:55 AM

சென்னை: 'அனைத்து அரசு பஸ்களும் இம்மாத இறுதிக்குள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கத்தில் சமீபத்தில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் பஸ்கள் இனி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு அங்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி ஆம்னி பஸ்கள் கோயம்பேடில் இருந்தே இயக்கப்படும் என ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய போக்குவரத்து பணிமனையை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் திறந்துவைத்து பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அனைத்து அரசு பஸ்களும் இம்மாத இறுதிக்குள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

