sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளக்காதலி கொலை: அரசு அலுவலர் கைது

/

கள்ளக்காதலி கொலை: அரசு அலுவலர் கைது

கள்ளக்காதலி கொலை: அரசு அலுவலர் கைது

கள்ளக்காதலி கொலை: அரசு அலுவலர் கைது


ADDED : ஜூலை 23, 2011 07:01 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 07:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:கள்ளக்காதலியை கொலை செய்ததாக அரசு அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே புங்கம்பாடி இந்திரா காலனியை சேர்ந்த மாகாளி மனைவி ஈஸ்வரி(45). இரண்டு ஆண்டுகளே சேர்ந்து வாழ்ந்துவிட்டு கணவனை பிரிந்துள்ளார் ஈஸ்வரி. சில ஆண்டுகளுக்கு முன்பு மாகாளி இறந்தார். இதற்கிடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆர்.கோம்பைச் சேர்ந்த செல்வராஜூடன்(52), ஈஸ்வரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர், குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் உதவி தோட்டக்கலை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் கள்ளத்தொடர்பு குறித்து இருதரப்பு உறவினர்களும் கண்டித்து வந்தனர். கள்ளத்தொடர்பை பயன்படுத்தி செல்வராஜூவிடம், ஈஸ்வரி பணம் வாங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு புங்கம்பாடியிலுள்ள ஈஸ்வரி வீட்டிற்கு செல்வராஜ் வந்துள்ளார். அங்கு இருவருக்குமிடையே பணம் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், செல்வராஜ், ஈஸ்வரியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான எரியோடு போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us