தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'கிரானைட்' வீரமணி மீதான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை

'கிரானைட்' வீரமணி மீதான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை

'கிரானைட்' வீரமணி மீதான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை


UPDATED : நவ 12, 2026 10:05 PM

ADDED : நவ 12, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 10:05 PM ADDED : நவ 12, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'கிரானைட் வீரமணி மீதான, முதல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கிரானைட் வீரமணி,85, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, 61, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன்,63, உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தாம்பரம் பகுதியை சேர்ந்த வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அதில்,'உயர் அதிகாரிகள் வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதால், சிறப்பு புலனாய்வு குழுவால், விசாரணையை, சுதந்திரமாகவும், திறம்படவும் மேற்கொள்ள முடியாது. எனவே, வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். அதேபோல, 'போக்சோ' வழக்கை இழுத்து மூடியது; பணம் கைமாறியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்கு தொடர்பான வீடியோக்கள், ஊடகங்களில் வெளியானது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கக்கோரி, 'துளிர்' அமைப்பின் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள், நீதிபதி வி.லட்சுமி நாராயண் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ''வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரு வழக்குகளில், 10 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான பிரகாஷ், தலைமறைவாக உள்ளார். அவரது முன் ஜாமின் மனு, 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது. பணப்பரிமாற்றம் தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. வழக்கின் தீவிரத்தை கருதி, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஆஜராக, மூன்று சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்து, கடந்த 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதி, வழக்குகளின் விசாரணையை வரும், 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

720 பக்க இறுதி குற்றப்பத்திரிகை

இதற்கிடையில், 'கிரானைட்' வீரமணிக்கு எதிரான முதல், 'போக்சோ' வழக்கில், 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 720 பக்க இறுதி குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us