ADDED : அக் 12, 2026 07:27 PM

சென்னை : 'கிரானைட்' வீரமணி, சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 'போக்சோ' வழக்குகளில் கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உடந்தையாக இருந்த வீரமணியின் தோழி சாந்தி, 61, இவரது கணவர் மகேந்திர சிம்ஹன், 63 உட்பட, ஆறு பேரும் கைதாகி உள்ளனர்.
வீரமணி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில், மதுரை மாவட்ட போலீசாருடன் இணைந்து, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். குற்றம் தொடர்பாக, 55 ஆவணங்களை கைப்பற்றினர்.
போலீசார் கூறியதாவது:
வீரமணி வீட்டில் இருந்து, ஏற்கனவே ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. சில தினங்களுக்கு முன், அவரின் கார் ஓட்டுனர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வீரமணி வீட்டில் மீண்டும் சோதனை நடந்தது. இதில், 55 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
