ADDED : ஜன 06, 2026 05:25 AM
சென்னை: ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ், அறுவடை திருவிழாவான பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து, தமிழகத்தில் 'பொன் பொங்கல்' சலுகையை அறிவித்துள்ளது.
தங்க நகைகளின் சேதாரத்தின் மீது 20 சதவீதம்; வைரம் மற்றும் வெட்டப்படாத வைரத்தின் மதிப்பில் 25; வெள்ளி பொருட்களின் சேதாரத்தின் மீது 25; வெள்ளி நகைகளின் எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலைகள் மீது, 10 சதவீதம் குறைவாக வாடிக்கையாளர்கள் பெறலாம். பிளாட்டினம் நகைகளுக்கு, செய்கூலி மற்றும் சேதாரம் மீது, 30 சதவீதம் வரை குறைவு.
இது குறித்து, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.அனந்த் என்ற அனந்தபத்மநாபன் கூறியதாவது:
பொங்கல் மற்றும் சங்கராந்தி நம் பண்பாடு. நாள்காட்டியில் சிறப்பு இடத்தை பெறும் இந்த விழாக்கள், செழிப்பு, புதுப்பிப்பு மற்றும் நேர்மறையை குறிக்கின்றன. ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ், இந்த பாரம்பரியங்களை கொண்டாடுவதோடு வாடிக்கையாளர்களுக்கு நவீன வடிவமைப்புகளையும், பண்டிகைக்கான மதிப்புகளையும் வழங்குவதில் பெருமை கொள்கிறது.
எங்களின் பொன் பொங்கல் - தமிழகம்; ஸ்வர்ண சங்கராந்தி - ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா; 'கோல்டன் பெஸ்டிவல்' - சிங்கப்பூர் என்ற பிரசாரங்கள் வாயிலாக, பாரம்பரியமும் நவீன அழகும் பிரதிபலிக்கும் நகைகளுடன் பல்வேறு சலுகைகளை இணைத்து, இந்த திருவிழா காலத்தை நவீன பொற்காலமாக சிறப்பாக்குவதே எங்கள் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பொங்கல் மற்றும் சங்கராந்தி என்பது நம்பிக்கை, முன்னேற்றம், செழிப்பு நிறைந்த ஒரு பருவத்தை குறிக்கின்றன.
அதே நேரத்தில், புத்தாண்டை நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் வரவேற்கின்றன. தென் மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூரில், பண்டிகை காலத்தை வரவேற்கும் இந்த நேரத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

