நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: இதோ முழு விபரம்!
நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: இதோ முழு விபரம்!
UPDATED : டிச 04, 2024 09:14 AM
ADDED : டிச 04, 2024 09:05 AM

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீலகிரியில் மட்டும் 0.01 மீ குறைந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் எப்படி இருக்கிறது என மாதம்தோறும் பொதுப்பணித்துறை கணக்கீடு செய்து வருகிறது. துறையின் கண்காணிப்பில் இருக்கும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் இந்த கணக்கீடு நடத்தப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் (இந்த ஆண்டு) கணக்கிடப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் விவரம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக நிலத்தடி நீர்மட்டம் அளவு பின்வருமாறு:
* திருவள்ளூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் தரை மட்டத்தில் இருந்து, 3.78 மீட்டரில் நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. நவம்பர் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் 2.98 மீட்டராக அதிகரித்துள்ளது.
* காஞ்சிபுரத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3.22 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. நவம்பர் மாதம் 2.62 மீ ஆக அதிகரித்துள்ளது.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3.26 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 2.74 மீ ஆக அதிகரித்துள்ளது.
* விழுப்புரத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3.32 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 3.07 மீ ஆக அதிகரித்துள்ளது.
* கடலூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.89 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.45 மீ ஆக அதிகரித்துள்ளது.
* கள்ளக்குறிச்சியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 7.35 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 6.15 மீ ஆக அதிகரித்துள்ளது.
* திருவண்ணாமலையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.26 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 3.46 மீ ஆக அதிகரித்துள்ளது.
* ராணிப்பேட்டையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.30 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 3.51 மீ ஆக அதிகரித்துள்ளது.
* வேலூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 6.32 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 5.43 மீ ஆக அதிகரித்துள்ளது.
* திருப்பத்தூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 5.72 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.75 மீ ஆக அதிகரித்துள்ளது.
* கிருஷ்ணகிரியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3.64 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 2.56 மீ ஆக அதிகரித்துள்ளது.
* தர்மபுரியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 9.79 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம்7.91 மீ ஆக அதிகரித்துள்ளது.
* சேலத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 5.79 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.60 மீ ஆக அதிகரித்துள்ளது.
* நாமக்கல்லில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 7.18 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 5.87 மீ ஆக அதிகரித்துள்ளது.
* ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 6.57மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.83 மீ ஆக அதிகரித்துள்ளது.
* நீலகிரியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 1.36மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 1.37 மீ ஆக குறைந்துள்ளது. அதாவது, 0.01 மீட்டர் சரிந்துள்ளது.
* கோவையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 10.47மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 7.89 மீ ஆக அதிகரித்துள்ளது.
* திருப்பூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 8.12 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 6.10 மீ ஆக அதிகரித்துள்ளது.
* கரூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 5.48 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.02 மீ ஆக அதிகரித்துள்ளது.
.
* புதுக்கோட்டையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 6.24மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.69மீ ஆக அதிகரித்துள்ளது.
* திருச்சியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 6.60மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 5.45 மீ ஆக அதிகரித்துள்ளது.
* பெரம்பலூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 8.81மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 6.11 மீ ஆக அதிகரித்துள்ளது.
* அரியலூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.93 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.73 மீ ஆக அதிகரித்துள்ளது.
* தஞ்சாவூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 2.86மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 2.06 மீ ஆக அதிகரித்துள்ளது.
* திருவாரூரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3.23மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 2.71 மீ ஆக அதிகரித்துள்ளது.
.
* நாகப்பட்டினத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3.14மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 2.50 மீ ஆக அதிகரித்துள்ளது.
* மயிலாடுதுறையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3.05மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 2.42 மீ ஆக அதிகரித்துள்ளது.
* மதுரையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.83மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 3.43 மீ ஆக அதிகரித்துள்ளது.
* திண்டுக்கல்லில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 7.05மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 5.45 மீ ஆக அதிகரித்துள்ளது.
*தேனியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 6.18மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.91மீ ஆக அதிகரித்துள்ளது.
* விருதுநகரில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 5.21மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.39 மீ ஆக அதிகரித்துள்ளது.
* சிவகங்கையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.60மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.39 மீ ஆக அதிகரித்துள்ளது.
* ராமநாதபுரத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.14 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 3.71 மீ ஆக அதிகரித்துள்ளது.
* தூத்துக்குடியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 5.07மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 4.83 மீ ஆக அதிகரித்துள்ளது.
* தென்காசியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 6.48 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 5.76 மீ ஆக அதிகரித்துள்ளது.
* திருநெல்வேலியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 5.72மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 5.54மீ ஆக அதிகரித்துள்ளது.
* கன்னியாகுமரியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 4.48 மீ நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் 2.73 மீ ஆக அதிகரித்துள்ளது.
ஒரு மாத இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த கணக்கீட்டில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் தவிர்த்த அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.