ADDED : பிப் 04, 2024 02:06 AM
சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் -- 2' நேர்முக தேர்வு வரும் 12ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ பதவிகளில், 6,151 காலியிடங்களை நிரப்ப, முதல்நிலை தகுதி தேர்வு, 2022 மே 21ம் தேதி நடந்தது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதன் முடிவுகள், அந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டன. 51,987 பேர் பிரதான தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்., 25ல் பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள், கடந்த மாதம் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, 161 நேர்முக தேர்வு பதவிக்கு, 483 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 17 வரை நேர்முக தேர்வு நடத்தப்படும். பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.