ADDED : ஜூலை 15, 2025 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: குரூப் 4 தேர்வில், 'விடியல் பயணம்' குறித்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுதும் குரூப் - 4 தேர்வு இரு நாட்களுக்கு முன் நடந்தது. இந்த தேர்வில், தமிழில் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், 'கட் ஆப்' மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாகவும் தேர்வர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அத்துடன் தேர்வில், 'தமிழகத்தில் விடியல் பயணத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அரசு திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பலாம் என்று ஒரு தரப்பினரும், இது தி.மு.க., அரசுக்கு விளம்பரம் தேடும் வகையில் இருக்கிறது என்று, மற்றொரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.