ADDED : செப் 24, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பி.எஸ்.சி., என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 2, குரூப் - 2ஏ நிலையில், 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, இம்மாதம் 14ம் தேதி நடத்தியது.
இந்த தேர்வை, 5.81 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடை குறிப்புகளை, டி.என்.பி.எஸ்.சி., தன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
இதுகுறித்த மறுப்புகளோ, கருத்துகளோ இருந்தால், வரும் 30ம் தேதி மாலை 5:45 மணிக்குள், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம்.