ADDED : அக் 14, 2024 09:22 AM
சென்னை : 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் --- 4ன் கீழ் வரும் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை, 15,000 வரை அதிகரிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக மூன்று ஆண்டுகளில் 34,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக, இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் குரூப் - 4 போட்டி தேர்வை எழுதிய இளைஞர்கள், முடிவிற்காக காத்திருக்கின்றனர். அவர்களின் நலன் மற்றும் லட்சக்கணக்கில் காலி பணியிடங்கள் உள்ளதையும் கருதி, குரூப் - 4ன் கீழ் வரும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை, 15,000 வரை அதிகரிக்க, முதல்வர் நடவடிக்கை எடுத்து அரசு துறைகளில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.