ADDED : செப் 29, 2025 01:40 AM
தன்னை தாக்கி பேசியவர்களாக இருந்தாலும், தன் கடமையில் இருந்து ஒரு நாளும் முதல்வர் ஸ்டாலின் தவறியதில்லை. யாராக இருந்தாலும், உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டிருந்தார்.
த.வெ.க., தலைவர் விஜய் திருச்சிக்கு சென்றபோது, பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அவர் செல்லும் இடமெல்லாம் பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, மின் கம்பங்களில் கட்சியினர் ஏறுவது உள்ளிட்ட காரணங்களால், போலீசார் நிபந்தனைகள் விதித்து அனுமதி கொடுக்கின்றனர்.
ஆனால், கட்டடத்தின் மீது ஏறி குதிப்பது, சாரத்தின் மேல் ஏறி நிற்பது போன்றவற்றை செயல்படுத்துமாறு த.வெ.க.,வினருக்கு சொல்ல, கட்சியில் ஒரு குழு நியமித்துள்ளனர். இது, உளவுத்துறை வாயிலாக தெரிய வந்துள்ளது.
பொது சொத்துக்களை சேதப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டவர்களுக்கு, த.வெ.க.,வினர் பணம் கொடுத்துள்ளனர். தேவையானால், அதை நிரூபிக்க முடியும். இந்த விஷயங்களை அனுமதிக்கக்கூடாது.
- ஆர்.எஸ்.பாரதி,
அமைப்பு செயலர், தி.மு.க.,