ADDED : ஜன 31, 2026 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு, வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கோரி, த.வெ.க.,சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்குகளை தாக்கல் செய்தது.
அவற்றை தொடர்ந்து அதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், த.வெ.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

