UPDATED : ஜூன் 24, 2025 08:04 AM
ADDED : ஜூன் 24, 2025 07:43 AM

சென்னை: இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இதனால், பஹ்ரைன், லெபனான், ஈராக், கத்தார் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
இதனால், தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் மறு உத்தரவு வரும் வரை அதன் விமான சேவையை ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து, இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும். பயணிகள் தங்களது பயண நேரத்தை திட்டமிடுவதற்கு முன்பாக, விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.