ADDED : மே 27, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன்படி, தமிழகத்தில், 2013 மே 23ம் தேதி முதல், புகையிலை மற்றும் நிகோட்டினை மூலப்பொருளாக கொண்ட, உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகிறது.
இந்த பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், வினியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு, 2026 மே 23ம் தேதி வரை, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு, தமிழக அரசு தடையை நீட்டித்துள்ளது. இதன் விபரம், தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

