குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!
குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!
ADDED : மே 26, 2025 05:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் படி, 2013ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடைடைய அரசு அமல்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டு இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்தாண்டு விதிக்கப்பட்ட தடையானது, 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பு காலாவதியாகி விட்ட நிலையில் மீண்டும் தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2026ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.