பெரம்பலூரில் கையெறி நாட்டு வெடி குண்டு: ஆய்வில் தகவல்
பெரம்பலூரில் கையெறி நாட்டு வெடி குண்டு: ஆய்வில் தகவல்
ADDED : பிப் 01, 2024 08:00 PM
பெரம்பலுார்:பெரம்பலுார், இலங்கை அகதிகள் முகாம் அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் கையளவு அளவுள்ள பேப்பரால் சுற்றப்பட்ட 16 உருண்டை வடிவிலான கையெறி நாட்டு வெடிகுண்டுகள் டிராவல் பையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் எதிர் புறத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த ட்ராவல் பேக்கை, அப்பகுதியை சேர்ந்த சண்முகராஜா மகன் கீர்த்திபன்,31, என்பவர் நேற்று முன்தினம் மாலை எடுத்து பார்த்தார். அப்போது, அதில் கையளவு அளவுள்ள பேப்பரால் சுற்றப்பட்ட 16 உருண்டை வடிவிலான கையேறி நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை பார்த்து பெரம்பலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடம் வந்த பெரம்பலுார் போலீசார் அதை கைப்பற்றினர். இதுகுறித்து, பெரம்பலுார் தெற்கு வி.ஏ.ஓ., ராஜதுரை,36, கொடுத்த புகாரின்பேரில் வெடிபொருள் தடுப்பு சட்டம் 1908ன்படி வழக்கு பதிவு செய்து, சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள அம்மன் வெடிபொருள் தயாரிப்பு குடோனில் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, திருச்சி சிட்டி வெடிபொருட்கள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எட்வர்ட் தலைமையிலான குழுவினர் அதனை ஆய்வு செய்து கையேறி நாட்டு வெடிகுண்டு என்று உறுதி செய்தனர். இச்சம்பவம் பெரம்பலுாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.