தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்

மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்

மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்

11


ADDED : ஜூன் 08, 2026 11:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 11:47 AM

11


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக மின்சார வாரிய தலைமையகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் நடந்த, 397 கோடி ரூபாய் முறைகேடு குறித்து, சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ள நிலையில், மின் வாரிய தலைமை அலுவலகத்தில், டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டு உள்ளன.

கடந்த மாதம், 20ம் தேதி, இதைக் கண்டறிந்த பொறியாளர் மலர்விழி, தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின் வாரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மே, 16 மற்றும், 17 ஆகிய வார இறுதி நாட்களில், குறைந்த அளவு ஊழியர்கள் பணியில் இருந்த போது, ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கோபிநாத் மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி, பெங்களூருவில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விசாரணை தமிழகத்தைத் தாண்டி விரிவடைந்துள்ளதாலும், இதில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து போலீசார் பரிசீலித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னைபோலீசார், டிஜிபியிடம் பரிந்துரை செய்ததன்பேரில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us