அண்ணாமலை லண்டன் பயணத்திற்கு 'ஹேஷ்டாக்': 'டிரெண்ட்' செய்ய பா.ஜ., ஏற்பாடு
அண்ணாமலை லண்டன் பயணத்திற்கு 'ஹேஷ்டாக்': 'டிரெண்ட்' செய்ய பா.ஜ., ஏற்பாடு
ADDED : ஆக 28, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : அண்ணாமலை அரசியல் சான்றிதழ் படிப்புக்காக இன்று(ஆக.,28) லண்டன் செல்லும் அவர், நவம்பரில் இந்தியா திரும்புகிறார்.
மூன்று மாதங்களும் லண்டனில் இருந்தவாறே 'ஆன்லைன்' வாயிலாக கட்சிப் பணியையும் கவனிப்பார். அவரது லண்டன் பயணம் வெற்றிபெற 'அண்ணாமலை' என்ற ஹேஷ்டாக்கை சமூக வலைதளத்தில் 'டிரெண்ட்' செய்ய பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது.
பா.ஜ.,வின் ஐ.டி.,விங் பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி, இன்று காலை 8:00 மணி முதல் அதனை டிரெண்ட் செய்ய கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.