தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அமைச்சர்கள் மீது அவதுாறு வழக்கு தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் அனுமதி

அமைச்சர்கள் மீது அவதுாறு வழக்கு தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் அனுமதி

அமைச்சர்கள் மீது அவதுாறு வழக்கு தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் அனுமதி


ADDED : அக் 05, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கிரானைட் வீரமணிக்கு எதிரான வழக்கில், தி.மு.க.,வை தொடர்புப்படுத்தி பேசிய அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் த.வெ.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக, அவதுாறு வழக்கு தாக்கல் செய்ய, தி.மு.க.,வுக்கு அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த, கிரானைட் வீரமணிக்கு எதிரான வழக்கில், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், முந்தைய தி.மு.க., அரசு தப்பிக்க விட்டு விட்டது’ என, முதல்வர் விஜய், தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் பேசினர்.

த.வெ.க.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும், தி.மு.க., அரசுக்கு எதிராக குற்றம்சாட்டி, தன் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டது. இது, தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, கிரானைட் வீரமணிக்கு எதிரான வழக்கில், தி.மு.க., அரசு மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவிக்க, அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் த.வெ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியோருக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பொது செயலர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், ‘ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கும்படி, அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனு, நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைத்திருந்தார்.

இந்த வழக்கில், நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி நேற்று உத்தரவிட்டார். அப்போது, அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் த.வெ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக, அவதுாறு வழக்கு தாக்கல் செய்ய, தி.மு.க.,வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us