sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நஷ்டஈடு கோரி இன்ஸ்பெக்டர் மனு : டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

/

நஷ்டஈடு கோரி இன்ஸ்பெக்டர் மனு : டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

நஷ்டஈடு கோரி இன்ஸ்பெக்டர் மனு : டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

நஷ்டஈடு கோரி இன்ஸ்பெக்டர் மனு : டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்


ADDED : செப் 28, 2011 11:34 PM

Google News

ADDED : செப் 28, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பொய் புகாரில் நடவடிக்கை எடுத்து, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய இன்ஸ்பெக்டரின் மனு குறித்து பதிலளிக்க, டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

நெல்லை பாப்பாகுடி இன்ஸ்பெக்டர் குமாரவேல் தாக்கல் செய்த 'ரிட்' மனு: விருதுநகரில், 2000ல் எஸ்.ஐ.,ஆக பணிபுரிந்தேன். அப்போது எஸ்.பி., இன்ஸ்பெக்டராக இருந்த ஜான்ரோஸ் (தற்போது சென்னையில் டி.எஸ்.பி.,) எனக்கு பல வகைகளில் தொல்லை கொடுத்தார். அவர் மீது அப்போதைய எஸ்.பி., ஆபாஷ்குமாரிடம் ( தற்போது ஐ.ஜி.,) புகார் கொடுத்தேன். அவர் இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக இருந்தார். மேலும், எஸ்.பி., டிரைவரை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்ததாக என் மீது பொய்யாக புகார் செய்யப்பட்டது.

புகார் மீது நடவடிக்கை எடுக்க அப்போதைய டி.ஐ.ஜி., ஜாங்கிட் (தற்போது கூடுதல் டி.ஜி.பி.,) உத்தரவிட்டார். இவ்வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு பொய் புகார் என திரும்பப் பெற்றனர். பொய் புகாரில் நடவடிக்கை எடுத்து மன உளைச்சல் ஏற்படுத்திய ஜாங்கிட், ஆபாஷ்குமார், ஜான்ரோஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனு குறித்து பதிலளிக்குமாறு, டி.ஜி.பி., மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ஆர்.சுதாகர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us