'பணிகள் நடக்கவில்லையே என கேட்டால் கும்பிடு போடுகிறார்'
'பணிகள் நடக்கவில்லையே என கேட்டால் கும்பிடு போடுகிறார்'
ADDED : செப் 20, 2024 08:29 PM
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், காட்பாடி கூட்டுறவு நகரமைப்பு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், 1.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 24 புதிய கடைகள் கட்டப்பட்டு, அதன் தொடக்க விழா நடந்தது. அமைச்சர் துரைமுருகன் புதிய கடைகளை திறந்து வைத்து பேசியதாவது:
வேலுார் மாநகராட்சியை பொறுத்தவரை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அனைத்து சாலைகளையும் கொத்தி போட்டுள்ளனர். இந்த பணியை எடுத்தவர்கள், பெரிய பெரிய கான்ட்ராக்டர்கள். ஒரு அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வும் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். ஆனால், இன்று வரை பணிகள் நடக்கவில்லை. நான் கேட்டால், அவர் கும்பிடு போட்டு சென்று விடுகிறார். அமைச்சர் நேருவிடம் கூறி, இவை சரி செய்யப்படும்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி அதுவும் நிரம்பவில்லை; அமைச்சர் வருகிறார் என்பதற்காக, அவசரப்பட்டு திறப்பு விழா நடத்தக்கூடாது. காந்திநகரில், இரண்டு கழிவு நீர் கால்வாய்கள் செல்கிறது. இது செப்பனிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.