அவருக்கு வேலை இல்லை...! ஏதாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாரு...! இ.பி.எஸ்.,ஐ சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
அவருக்கு வேலை இல்லை...! ஏதாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாரு...! இ.பி.எஸ்.,ஐ சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : அக் 26, 2024 02:12 PM

சென்னை: 'எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு வேலை இல்லை. அவர் ஏதாவது சொல்லி கொண்டுதான் இருப்பாரு... அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை' என முதல்வர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் பதில் அளித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: மதுரையில் சில இடங்களில் மட்டுமே மழையால், பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.சென்னையில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. 2 அமைச்சர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இன்னும் 8 பகுதிகளில் தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்றும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். சென்னையில் இருந்து அதிகாரிகளை அனுப்பியுள்ளோம்; நிவாரணப் பணிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்கள் கேள்வி!
பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் அரசு கடன் வாங்கிதான் கொடுக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
முதல்வர் பதில்!
இதற்கு, முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில், 'அவரு சொல்லிகிட்டு இருப்பாருங்க, அவருக்கு வேற வேலை கிடையாது. அவர் பெயர் தினமும் பத்திரிகைகளில் வர வேண்டும். அவர் முகம் அடிக்கடி டிவியில் வர வேண்டும். இதற்காக அவர் ஏதாவது சொல்லி கொண்டு இருப்பாரு...அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.