எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!
எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!
ADDED : மார் 20, 2025 02:23 PM

சென்னை: 'தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ஏற்று, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்' என, அக்கட்சியினருக்கு பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தேனியில் நடந்த கட்சி கூட்டத்தில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதாவது:
மேல்முறையீடு
மேல்முறையீடு செய்யவில்லை. குறைந்தபட்சம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து, உயர்நீதிமன்றத்தில் இப்படி உத்தரவு வந்து இருக்கிறது என்ன செய்யலாம். இதை ஏற்பதா? நிராகரிப்பதா? அல்லது மாற்றுவழி என்ன? என்பது குறித்து கலந்து ஆலோசித்து இருக்கலாம்.
இப்படி எந்த அணுகுமுறையும் மேற்கொள்ளாமல், தன்னிச்சையாக, நாங்களே கொடிகளை எல்லாம் அகற்றி கொள்கிறோம் என கூறியுள்ளார். அந்த உத்தரவில் என்ன இருக்கிறது என்றால், 12 வாரங்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால் போலீசாரே அகற்றிவிட்டு, அதற்கான கட்டணத்தை கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன காண்டு?
இந்த அரசியல் கட்சிகள் மேல், நீதிபதிகளுக்கு எல்லாம் என்ன காண்டு என்று தெரியவில்லை. சமீப காலமாக ரொம்ப மோசமாக எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறார்கள். நான் கேட்பது, சமீப காலமாக தி.மு.க.,வுக்கு இது சொந்த பிரச்னையா? தி.மு.க.,விற்கு மட்டுமான பிரச்னையா இது, குறைந்தபட்சம் கலந்து பேச வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
10 என்றால் 150!
நக்கல், நையாண்டி
