ADDED : ஆக 04, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பன்னீர் செல்வம் பா.ஜ., கூட்டணியில் இருந்து, கனத்த இதயத்துடன் வெளியேறி உள்ளார். அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி அவர். எனவே, ஜெயலலிதாவின் தொண்டர்கள் மனம் வருந்தும் முடிவை, ஒருபோதும் எடுக்க மாட்டார். பன்னீர் செல்வம், கடந்த ஏழு ஆண்டுகளாக, பா.ஜ., உடன் உறவில் இருந்தவர். அவர், தன் ஆதங்கத்தை சொல்லி உள்ளார். என்னை பொறுத்தவரை, அவர் தி.மு.க., பக்கம் செல்லும் முடிவை எடுக்க மாட்டார்.
-தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

