தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவியரிடம் கூடுதல் கட்டணம் தலைமையாசிரியர் ‘துாக்கியடிப்பு’

மாணவியரிடம் கூடுதல் கட்டணம் தலைமையாசிரியர் ‘துாக்கியடிப்பு’

மாணவியரிடம் கூடுதல் கட்டணம் தலைமையாசிரியர் ‘துாக்கியடிப்பு’


UPDATED : அக் 11, 2026 08:02 PM

ADDED : அக் 11, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 08:02 PM ADDED : அக் 11, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: மாணவியரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில், விராலிமலை அரசு பள்ளி தலைமையாசிரியர் ரோஜா வினோதினி, 54, பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். எஸ்.எம்.சி., தினசரி செய்தித்தாள் உள்ளிட்ட பராமரிப்புக்கு மாணவியரிடம் குறைந்த கட்டணம் வசூலிக்க விதி உள்ளது.

ஆனால், அரசு நிர்ணயித்த குறிப்பிட்ட கட்டணத்தை விட, இப்பள்ளி மாணவியரிடம் ரோஜா வினோதினி, பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக, மாணவியரின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

அந்த பள்ளிக்கு அக்., 8ல் சென்ற புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், ஆசிரியர்கள், மாணவியரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். இதையடுத்து, ரோஜா வினோதினியை, புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்து, நேற்றுமுன் தினம் சண்முகம் உத்தரவு பிறப்பித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us