ADDED : அக் 14, 2025 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக கைதான, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன் ஜாமின் கோரி, கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'கரூர் வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உச் ச நீதிமன்றம் உத் தர விட்டுள்ளது. எனவே , ஜாமின் மனு மீதான விசாரணையை, சி.பி.ஐ., வழக்கறிஞர்கள் ஆஜராகும் வரை ஒத்திவைக்க வேண்டும்' என, மதியழகன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணையை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி இளவழகன் ஒத்திவைத்தார்.