தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10 மாவட்டங்களில் இன்று கனமழை

10 மாவட்டங்களில் இன்று கனமழை

10 மாவட்டங்களில் இன்று கனமழை


UPDATED : அக் 08, 2024 02:36 PM

ADDED : அக் 08, 2024 06:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2024 02:36 PM ADDED : அக் 08, 2024 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடக்கு, வடமேற்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் வெப்பக்காற்று காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இது, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கேரளா மற்றும் தமிழக தென் மாவட்டங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது தொடரும் நிலையில், லட்சத்தீவுகள், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்ன லுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 13 வரை, இது தொடர வாய்ப்பு உள்ளது.

இன்று: திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி. நாளை: திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, துாத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பான பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்: (மில்லி மீட்டரில்)

வரட்டுப்பள்ளம், ஈரோடு- 66.6,

தேனாம்பேட்டை- 39,

பனப்பாக்கம்,ராணிப்பேட்டை- 36.2,

அண்ணா நகர்- 30.4,

குண்டேரிப்பள்ளம்- 30.2,

பெருங்குடி - 29,

தாளவாடி- 28.5,

எலந்தக்குட்டைமேடு- 28,

அம்பத்துார்- 26.8,

மங்களபுரம் - 26.6,

பாடாலுார்- 26,

எரையூர்- 26,

திருச்செங்கோடு- 24,

திருவாடானை- 31.4,

பரமக்குடி- 28,

நீலகிரி- 98,

பந்தலுார்- 68,

கீழ்கோத்தகிரி- 37,

தேவாலா - 32,

கோடநாடு- 21,

துறையூர்- 20,

ஓடை அணை- 25,

அமராவதி அணை- 25,

தாராபுரம்- 23,

மடத்துக்குளம்- 22,

பல்லடம்- 19,

பாப்பிரெட்டிப்பட்டி- 21,

பாலாமோர்- 21.2,

அடையாமடை- 18.2

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us